“மலேசியாவில் கொரோனா” – பாதிப்பை சந்திக்கும் இந்திய வியாபாரிகள்..!

Malaysia Covid 19 Update
Picture Courtesy vaitor.com

மலேசியாவில் தற்போது நடமாட்டக்கட்டுப்பாடு சில இடங்களில் அமலில் உள்ளது. பெரும்பாலான இடங்கள் திறந்திருந்தாலும் சிறு வணிகம் (Indian Merchants) பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக மஸ்ஜித் இந்தியா போன்ற இடங்களில் உள்ள கடைகளில் மக்கள் கூட்டம் குறைவாக உள்ள நிலையில் வணிகம் பெருமளவு (Indian Merchants) பாதிக்கப்பட்டுள்ளது.

கோலாலம்பூரில் பூக்கடை, சிற்றுண்டி கடைகள், மளிகை கடை போன்ற சிறுவணிகங்கள் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பல வணிகர்களும் பெருமளவு பொருளாதார சரிவை சந்தித்துள்ளனர்.

மலேசியா வரும் இந்தியர்களுக்கு 6 முக்கிய விதிகள்..!

பண்டிகை காலங்களில் மக்கள் வெள்ளம் சூழும் பகுதிகள் தற்போது வெறிச்சோடி காணப்படுகிறது. நவராத்திரி, தீபாவளி, கார்த்திகை தீபம் போன்ற பல பண்டிகை வரவிருக்கும் நேரத்தில் வியாபாரம் மந்தமாகவே காணப்படுகிறது.

அரசு தற்போது விதித்துள்ள நேரடி கட்டுப்பாடுகளால் வியாபாரம் மந்தமடைந்து வரும் நிலையில் சில வியாபாரிகள் இணைய வழி வியாபாரத்தை மேற்கொண்டு வருகின்றனர்.

இணைய வழி வர்த்தகம் இருந்தபோது பல வியாபாரிகள் பெருமளவு இழப்பை சந்தித்து வருவது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக இந்திய வியாபாரிகள் பெருமளவு சரிவை சந்தித்துள்ளது வருத்தமளிப்பதாக உள்ளது. மலேசியாவில் நாளுக்கு நாள் தொற்றின் அளவும் அதிகமாகி வருவது குறிப்பிடத்தக்கது.

நேற்று 835 பேர் மலேசியாவில் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அதே சமயம் 674 பேர் நேற்று குணமடைந்து வீடுதிரும்பியுள்ளனர்.

கொரோனா காரணமாக இதுவரை மலேசியாவில் 238 பேர் இறந்துள்ளனர். இறப்பு விகிதம் மலேசியாவில் மிக குறைவான அளவே இருந்த நிலையில் அண்மைக்காலமாக இறப்பு விகிதம் மலேசியாவில் அதிகரித்து வருகின்றது.

மலேசிய செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…

 Facebook

Telegram